இந்தியாவில் உருமாறிய கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.
பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களுக்குக் கரோனா மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில், மேலும் 20 பேருக்கு உருமாறிய கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உருமாறிய கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.
எந்தெந்த ஆய்வகங்களில் சோதனை நடத்தப்பட்டது? எத்தனை பேருக்கு உருமாறிய கரோனா?
டெல்லியில் உள்ள இரண்டு ஆய்வகங்களில் 19 பேருக்கும், கொல்கத்தாவில் உள்ள ஆய்வகத்தில் ஒருவருக்கும், புனேவில் உள்ள ஆய்வகத்தில் 25 பேருக்கும், ஹைதராபாத்தில் உள்ள ஆய்வகத்தில் 3 பேருக்கும், பெங்களூருவில் உள்ள ஆய்வகத்தில் 10 பேருக்கும் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் முடிவில் உருமாறிய கரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.