ADVERTISEMENT

'இந்தியாவில் 3.5 கோடியை கடந்தது கரோனா பரிசோதனை'!

10:04 AM Aug 25, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியாவில் 3.5 கோடிக்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் நேற்று வரை (24/08/2020) மொத்தம் 3,68,27,520 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது. அதேபோல் நாடு முழுவதும் நேற்று (24/08/2020) ஒரே நாளில் மட்டும் 9,25,383 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். குறிப்பிட்டுள்ளது.

தமிழகத்தில் நேற்று (24/08/2020) வரை மொத்தம் 42,76,640 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று (24/08/2020) மட்டும் தமிழகத்தில் 70,023 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

மேலும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, புதுச்சேரி, டெல்லி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உட்பட பல்வேறு மாநில அரசுகளும் நாள்தோறும் கரோனா பரிசோதனைகளை தங்களது மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT