Skip to main content

'இந்தியாவில் 10.25 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை' - ஐ.சி.எம்.ஆர் தகவல்!

Published on 25/10/2020 | Edited on 25/10/2020

 

india coronavirus samples icmr peoples

 

நாடு முழுவதும் நேற்று (24/10/2020) வரை மொத்தம் 10,25,23,469 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. அதேபோல், நாடு முழுவதும் நேற்று (24/10/2020) ஒரேநாளில் மட்டும் 11,40,905 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

 

இந்தியாவிலேயே அதிகபட்சமாக, தமிழகத்தில் நேற்று (24/10/2020) வரை மொத்தம் 94,36,817 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று (24/10/2020) மட்டும் தமிழகத்தில் 80,237 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, புதுச்சேரி, டெல்லி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உட்பட பல்வேறு மாநில அரசுகளும் நாள்தோறும் கரோனா பரிசோதனைகளை தங்களது மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

 

 

Next Story

ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக தரக்கூடாது; ஐ.சி.எம்.ஆர். எச்சரிக்கை

Published on 28/11/2022 | Edited on 28/11/2022

 

Do not over-prescribe antibiotics; ICMR alert

 

மக்களுக்கு லேசான காய்ச்சல் மற்றும் சளி போன்றவற்றுக்கே ஆன்டிபயாடிக் மருந்தினை மருத்துவர்கள் தரக்கூடாது என்று மருத்துவர்களுக்கு ஐ.சி.எம்.ஆர். எனப்படும் மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது.

 

ஆன்டிபயாடிக் மருந்துகள் உலகம் முழுவதும் மருத்துவர்களால் அதிகளவில் பரிந்துரை செய்யப்படுகிறது. உலகளவில் ஆன்டிபயாடிக் மருந்துகளை உட்கொள்ளும் மக்கள் இந்தியாவில் அதிகளவில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக கடந்த ஆண்டு முழுவதும் ஐ.சி.எம்.ஆர். நடத்திய ஆய்வில் கார்பெனம் எனப்படும் ஆன்டிபயாடிக் மருந்து அதிகமான மக்களுக்கு பலனளிக்கவில்லை என்பதும் தெரியவந்தது.

 

இந்நிலையில், ஆன்டிபயாடிக் என்று அழைக்கப்படுகின்ற நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சில வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி தோல் மற்றும் மெல்லிய திசு நோய்த்தொற்றுகளுக்கு 5 நாட்களுக்கும், சமூக அளவில் பரவியுள்ள நிமோனியாவுக்கு 5 நாட்களுக்கும், நிமோனியா பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு 8 நாட்களுக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் தரலாம்.

 

லேசான காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆன்டிபயாடிக் மருந்து தருவதை மருத்துவர்கள் தவிர்க்க வேண்டும். பொதுவாக, ரத்தம் அல்லது பிற திசுக்களில் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிர்களின் இருப்பு மற்றும் அவற்றின் இருப்புக்கு உடலின் எதிர்வினை ஆகியவற்றின் விளைவாக ஏற்படும் ஒரு தீவிர நிலை கொண்ட நோயாளிகளுக்கும் வழங்கலாம்.

 

பல்வேறு உறுப்புகளின் செயலிழப்பு, மரணத்திற்கு வழிவகுக்கும் செப்சிஸ் மற்றும் அதன் தீவிரநிலை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், சமூக அளவிலான நிமோனியா பாதித்து வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெறுவோர் ஆகியோருக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகள் தரப் பரிந்துரைக்கப்படுகிறது.