Skip to main content

'3.26 கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை' -ஐ.சி.எம்.ஆர். தகவல்!

 

india coronavirus sample tested details icmr

 

நாடு முழுவதும் நேற்று வரை (19/08/2020) மொத்தம் 3,26,61,252 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.

 

அதேபோல் நாடு முழுவதும் நேற்று (19/08/2020) மட்டும் 9,18,470 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். குறிப்பிட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் நேற்று (19/08/2020) வரை மொத்தம் 39,13,523 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று (19/08/2020) மட்டும் தமிழகத்தில் 67,720 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

 

மேலும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, புதுச்சேரி, டெல்லி, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உட்பட பல்வேறு மாநில அரசுகளும் நாள்தோறும் கரோனா பரிசோதனைகளை தங்களது மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.