ADVERTISEMENT

இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 9,951 ஆக உயர்வு!

09:09 AM May 02, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே- 17 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இருப்பினும் கரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களுக்கான தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT


இன்று (02/05/2020) காலை 08.00 மணி நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,365- லிருந்து 37,336 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,152- லிருந்து 1,218 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 9,065- லிருந்து 9,951 ஆக அதிகரித்துள்ளது.


அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 11,506 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,879 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 485 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் 7,000- க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


அதேபோல் குஜராத்தில் 4,721, டெல்லியில் 3738, மத்திய பிரதேசத்தில் 2,719, ராஜஸ்தானில் 2,666, தமிழகத்தில் 2,526, உத்தரப்பிரதேசத்தில் 2,328, ஆந்திராவில் 1,463, தெலங்கானாவில் 1,039, கர்நாடகாவில் 589, கேரளாவில் 497, புதுச்சேரியில் 8 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் 2,293 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்ட நிலையில் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT