india coronavirus positive case union health ministry

இந்தியாவில் கரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 67 ஆயிரத்தைத் தாண்டியது.

Advertisment

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளன.

Advertisment

இன்று (11/05/2020) காலை 08.00 மணி நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 62,939- லிருந்து 67,152 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,109- லிருந்து 2,206 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 19,452- லிருந்து 20,917 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கரோனாவால் 44,029 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 22,171 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4,199 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 832 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல் குஜராத்தில் 8,194, டெல்லியில் 6,923, தமிழகத்தில் 7,204, மத்திய பிரதேசத்தில் 3,614, ராஜஸ்தானில் 3,814, உத்தரப்பிரதேசத்தில் 3,467, ஆந்திராவில் 1,980, தெலங்கானாவில் 1,196, கர்நாடகாவில் 848, கேரளாவில் 512, புதுச்சேரியில் 9 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.