Advertisment

'இந்தியாவில் 53.08 லட்சம் பேருக்கு கரோனா' -மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்!

india coronavirus peoples

இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மஹாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

Advertisment

இன்று (19/09/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52,14,678- லிருந்து 53,08,015 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 84,372- லிருந்து 85,619 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 41.12- லட்சத்திலிருந்து 42.08 லட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் ஒரே நாளில் 95,880 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கரோனா பாதித்த 10.13 லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisment

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 93,337 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் கரோனாவுக்கு 1,247 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் கரோனா உயிரிழப்பு விகிதம் 1.62% ஆகவும், குணமடைந்தோர் விகிதம் 79.28% ஆகவும் இருக்கிறது. இந்த தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

peoples coronavirus India
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe