india coronavirus peoples samples tested details icmr

நாடு முழுவதும் நேற்று (15/10/2020) வரை, மொத்தம் 9,22,54,927 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. அதேபோல், நாடு முழுவதும் நேற்று (15/10/2020) ஒரேநாளில் மட்டும் 10,28,622 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Advertisment

இந்தியாவிலேயே அதிகபட்சமாக, தமிழகத்தில் நேற்று (15/10/2020) வரை மொத்தம் 86,74,793 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்று (15/10/2020) மட்டும் தமிழகத்தில் 90,752 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்ட்ரா, தமிழ்நாடு, புதுச்சேரி, டெல்லி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உட்பட பல்வேறு மாநில அரசுகளும் நாள்தோறும் கரோனா பரிசோதனைகளை தங்களது மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment