Advertisment

இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 90.16 லட்சமாக உயர்வு!

INDIA CORONAVIRUS PEOPLES MINISTRY OF HEALTH AND FAMILY WELFARE

தமிழகம் உட்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் கேரளா, டெல்லி, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கரோனா தடுப்பு பணிகளை மாநில அரசுகள் முடுக்கிவிட்டுள்ளனர்.

Advertisment

இன்று (04/12/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95,34,965- லிருந்து 95,71,559 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,38,648- லிருந்து 1,39,188 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 89.73 லட்சத்திலிருந்து 90.16 லட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒரே நாளில் 42,916 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கரோனா பாதித்த 4.16 லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Advertisment

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 36,594 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஒரேநாளில் கரோனாவுக்கு 540 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் கரோனா உயிரிழப்பு விகிதம் 1.45% ஆகவும், குணமடைந்தோர் விகிதம் 94.20% ஆகவும் இருக்கிறது. இந்தத் தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

peoples coronavirus India
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe