ADVERTISEMENT

'இந்தியாவில் 73.07 லட்சம் பேருக்கு கரோனா' - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்!

10:39 AM Oct 15, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேபோல் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்று (15/10/2020) காலை 08.00 மணி நிலவரப்படி, இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72,39,389- லிருந்து 73,07,098 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,10,586- லிருந்து 1,11,266 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63.01 லட்சத்திலிருந்து 63.83 லட்சமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக ஒரேநாளில் 81,541 பேர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கரோனா பாதித்த 8.12 லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 67,708 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஒரேநாளில் கரோனாவுக்கு 680 பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் கரோனா உயிரிழப்பு விகிதம் 1.52% ஆகவும், குணமடைந்தோர் விகிதம் 87.36% ஆகவும் இருக்கிறது. இந்த தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT