இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 லிருந்து 107 ஆக அதிகரித்துள்ளது.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸால் இரண்டு பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் 19 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கரோனா வைரஸால் அதிகம் பேர் பாதிக்கப்பட்ட மாநிலங்கள் பட்டியலில் மஹாராஷ்டிரா முதலிடமும், கேரளா இரண்டாவது இடமும் வகிக்கிறது.