கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mohf.jpg)
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,274-லிருந்து 5,734 ஆக உயர்ந்துள்ளது.இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149-லிருந்து 166 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 411-லிருந்து 473 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 540 பேருக்கு கரோனா உறுதியான நிலையில் 17 பேர் இறந்துள்ளனர்.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1135, தமிழ்நாடு 738, டெல்லி 669, தெலங்கானா 427, ராஜஸ்தான் 381, உத்தரப்பிரதேசம் 361, ஆந்திரா 348, கேரளா 345 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)