india corona update

இந்தியாவில் கரோனா பாதிப்பு 24லட்சத்தை தாண்டியது. 24,61,190பேருக்குஇதுவரை இந்தியாவில்கரோனா உறுதி செய்யப்பட்டதால்25 லட்சத்தை நோக்கி மொத்த பாதிப்புநகர்ந்து வருகிறது.அதேபோல் இந்தியாவில் இதுவரை கரோனாவிற்கு 48,040 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் 17.51 லட்சம் பேர்கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.கடந்த 24 மணி நேரத்தில்இதுவரை இல்லாத அளவிற்கு1,007 பேர் கரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

Advertisment

கடந்த 24 மணி நேரத்தில் 55,573 பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.அதேபோல் 6.61 லட்சம் பேருக்கு இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில்சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 64,553பேருக்குகரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்தியாவில் கரோனா உயிரிழப்பு 1.96 சதவீதமாகவும், குணமடைந்தோர்விகிதம் 70.77 சதவீதமாகவும் உள்ளது.

Advertisment

இந்தியாவில் இதுவரை 2.76கோடி கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.அதேபோல் இன்று ஒரே நாளில் இந்தியாவில் 8.48லட்சம்கரோனாமாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.