இந்தியாவில்கரோனாதடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.கரோனாதடுப்பூசி செலுத்திக்கொண்ட சிலருக்கு காய்ச்சல் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட்டு சில நாட்களில் குணமாகி விடுகிறது. இதற்கிடையேகரோனாதடுப்பூசியால் ஏற்பட்ட முதல் மரணத்தை இந்தியா உறுதி செய்துள்ளது.
நோய்த்தடுப்புமருந்துகளால்தொடர்ந்து ஏற்படும் பாதகமானநிகழ்வுகளைகண்காணிக்கும் குழு,கரோனாதடுப்பூசி செலுத்திக்கொண்டபிறகு கடுமையான பாதிப்புக்குள்ளான 31 வழக்குகளை ஆய்வு செய்தது. இந்த ஆய்வில் தடுப்பூசி செலுத்திக்கொண்டமூவருக்குஅனாபிலாக்ஸிஸ்என்ற கடுமையான ஒவ்வாமை ஏற்பட்டதாக அந்த குழு கூறியுள்ளது. அந்த மூவரில் ஒருவர் இறந்துவிட்டதாகவும் பாதகமான நிகழ்வுகளை ஆய்வு செய்யும் அரசின் குழு தெரிவித்துள்ளது.
தடுப்பூசி பக்க விளைவால் இறந்த நபருக்கு 68 வயது என்றும், அவர் மார்ச் 8 ஆம் தேதி தடுப்பூசி செலுத்திக்கொண்டதாகவும்பாதகமானநிகழ்வுகளைகண்காணிக்கும் குழு தெரிவித்துள்ளது.