மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் ஒன்றான 'ஓஎன்ஜிசி' (ONGC- OIL AND NATURAL GAS CORPORATION LIMITED) நிறுவனத்தில் 107 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. இதற்கான பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இணைய தள முகவரி: https://www.ongcindia.com/wps/wcm/connect/en/home/ (அல்லது) http://e-apply.in/cbtex0218/ சென்று விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும் நாள்: 29/05/2019. விண்ணப்பிக்க கடைசி நாள்: 18/06/2019. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணம் (OBC/GENERAL) : RS.370, SC/ST/PWD/ EX.Serviceman உள்ளிட்டோர்களுக்கு விண்ணப்பக் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Advertisment

ONGC

விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 19/06/2019. கல்வி தகுதி: Environment Engineering , Environment science, Fire Engineering, MBA. அதே போல் கணினி மூலம் தேர்வு (COMPUTER BASED TEST) நடைப்பெறும். இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஓஎன்ஜிசி 'ONGC' நிறுவனத்தில் இந்த பணியில் தேர்வாகும் நபர்களுக்கு மாதம் சம்பளம் ரூபாய் 60,000 முதல் 1,80,000 வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு இணைய தள முகவரி: www.ongcindia.com அணுகவும்.

Advertisment