2021 - 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் இன்று (01.02.2021) நிதி அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. முதல்முறையாகடிஜிட்டலில் இந்தியபட்ஜெட்தாக்கல் செய்யப்படுகிறது.
இந்தநிலையில், விரைவில் நடைபெறவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, இந்தியாவின் முதல் டிஜிட்டல் கணக்கெடுப்பாக இருக்கும் எனமத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்அறிவித்துள்ளார். இந்த இமாலய பணிக்காக3,768 கோடிநிதி ஒதுக்கப்படுவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் இறுதியாக கடந்த 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. மக்கள் தொகை கணக்கெடுப்பு 10 வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் என்பதுகுறிப்பிடத்தக்கது.