நடிகர் சோனு சூட் மீது வழக்குப்பதிவு!

sonu sood

கரோனாமுழு ஊரடங்கு காலத்திலிருந்து தற்பொழுது வரை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உட்பட பலதரப்பட்ட ஏழை மக்களுக்குத்தொடர்ந்து உதவிகளைச் செய்து வருபவர் பாலிவுட் நடிகர்சோனுசூட். அநேகப் படங்களில் வில்லனாகநடித்திருந்தாலும் இவர் செய்தஉதவிகளின் மூலம் பலதரப்பிலிருந்தும் பாராட்டைப்பெற்றுஹீரோவானார். அண்மையில் அவர் தனது10 கோடிமதிப்பிலான சொத்துகளை அடமானம் வைத்து, பலருக்கும்உதவிகளைச் செய்துள்ளார் என்ற தகவல்கள்வெளியாகி, மேலும் ஒரு ஸ்டெப், ரசிகர்கள் மனதில்ஏறி அமர்ந்தார் சோனுசூட்.அவரதுஉதவும்மனப்பான்மையைப் பாராட்டும்விதமாக அவருக்குசிலைவைக்கப்பட்டது.

இந்நிலையில், மும்பையில் உள்ள அவரது குடியிருப்பை, சட்டத்தை மீறிஅவர் ஹோட்டலாக மாற்றியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாகபோலீசார்அவர் மீது வழக்கும்பதிவு செய்துள்ளனர். ஆனால், இந்தப் புகாருக்கு மறுப்புத் தெரிவித்துள்ள நடிகர் சோனு சூட், "கரோனா காலத்தில் பொதுமக்கள், மருத்துவர்கள் உட்பட கரோனா முன்களப் பணியாளர்கள் தங்குவதற்குஹோட்டலாகப் பயன்படுத்தப்பட்டது. நான் ஒருபோதும்சட்டத்தை மீறுபவன் அல்ல.இதற்காகமாநகராட்சியில் அனுமதி பெறப்பட்டுத்தான் பயன்படுத்தப்பட்டது. இந்தப் புகாருக்குஎதிராகமும்பை நீதிமன்றத்தில் வழக்குத்தொடரவுள்ளேன்" எனத்தெரிவித்துள்ளார்.

Mumbai police sonu sood
இதையும் படியுங்கள்
Subscribe