ADVERTISEMENT

எலான் மஸ்க்கின் இணைய சேவைக்குத் தடை விதித்த மத்திய அரசு!

06:53 PM Nov 27, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம், ஸ்டார்லிங்க் என்ற திட்டத்தின் மூலம் செயற்கைக்கோள் வழியாக இணைய இணைப்பை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்தநிலையில், இணைய இணைப்பின் பீட்டா வெர்ஷன் சேவையைப் பெற முன்பதிவு செய்யலாம் என ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தச்சூழலில் இந்தியர்கள் யாரும் ஸ்டார்லிங்க் இணைய சேவைக்கு முன்பதிவு செய்ய வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் செயற்கைக்கோள் மூலமாக இணையச் சேவை வழங்குவதற்கு ஸ்டார்லிங் உரிமம் வாங்கவில்லை எனவும், செயற்கைக்கோள் மூலமான தகவல் தொடர்பு சேவைகளை வழங்க, இந்திய ஒழுங்குமுறை கட்டமைப்பிற்கு இணங்குமாறும், அதுபோன்ற சேவைகளைத் தருவதையும் அதற்காக முன்பதிவு செய்வதையும் உடனடியாக நிறுத்துமாறும் அந்த நிறுவனத்தை அரசாங்கம் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனவே இந்தியர்கள் யாரும் ஸ்டார்லிங் சேவைக்கு முன்பதிவு செய்யவேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT