Advertisment

அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்!

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக இருந்தவர் சாண்டியூஸ் குஜுர். இவர் கடந்த 13 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார். மேலும் அசாம் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் சாண்டியூஸ் குஜுர் காங்கிரஸ் கட்சித்தலைமைக்கு எழுதியுள்ள கடிதத்தில், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் விலகுவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனிப்பட்ட காரணங்களால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

Advertisment

india assam state congress party leader santiuse gujur resignaton letter send it congress party

Advertisment

காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவுக்கு காங்கிரஸ் தலைமை எதிரான நிலைப்பாட்டை எடுத்த நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல முக்கிய தலைவர்கள், அக்கட்சியில் இருந்து விலகி வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை கொறடா புவனேஸ்வர் தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. இவரும் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர்.

Assam congress leader India resignation santiuse kujur
இதையும் படியுங்கள்
Subscribe