வடகிழக்கு மாநிலங்களில் தற்போது தென் மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் அசாம் மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சுமார் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளன. அதே போல் சுமார் 1 கோடி மக்கள் வீடுங்களை இழந்துள்ளன. ஆங்காங்கே மீட்பு பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு மாநிலங்களில் ஓடும் அனைத்து ஆறுகளும் அபாயக்கட்டத்தை எட்டியுள்ளதாலும், கனமழை தொடர்ந்து பெய்து வருவதாலும் மக்கள் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் உலக புகழ் பெற்ற காசிரங்கா வன விலங்குகள் சரணாலயம் முற்றிலும் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளது. இதனால் சரணாலயத்தில் உள்ள விலங்குகளை மீட்கும் முயற்சியில் சமூக ஆர்வலர்கள், வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளன.
மேலும் சில விலங்குகள் மேடான பகுதிக்கு செல்கிறது. இந்நிலையில் காசிரங்கா சரணாலயத்தில் காண்டாமிருகம், யானைகள், மான்கள் உட்பட 150 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக அசாம் மாநில அரசு அறிவித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள விலங்குகளுக்கு அதிகாரிகள் உணவளிக்க முடியாததால், அதிக அளவில் விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது மட்டுமின்றி போபிட்டோரா உள்ளிட்ட மற்ற உயிரியல் பூங்காவிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வன விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. . இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.