Skip to main content

இந்திய ராணுவ வீரருக்கும் கரோனா!

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

இந்தியாவில் ராணுவ வீரர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. 
 

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸுக்கு பலியானோர் எண்ணிக்கை 7,965 ஆக அதிகரித்துள்ளது. 165 நாடுகளுக்கு பரவிய கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் 1,98,214 ஆக உயர்ந்துள்ளது. 

india army coronavirus in ladakh father iran trip back to home

இந்நிலையில் இந்தியாவில் முதன் முறையாக ராணுவ வீரர் ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. ராணுவ வீரரின் தந்தை ஈரானுக்கு புனித பயணம் செய்து விட்டு திரும்பிய போது கரோனா இருப்பது தெரிந்தது. தந்தையிடம் இருந்து ராணுவ வீரருக்கும் வைரஸ் தொற்று பரவியுள்ளது.
 

ராணுவ வீரருக்கு கரோனா காரணமாக அவரது மனைவி, இரு குழந்தைகள், சகோதரி தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ராணுவ வீரர் லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

‘முன்னாள் ராணுவ வீரர்கள் கவனத்திற்கு’ - தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
 Tamil Nadu Govt announced Ex-Servicemen Tax Concession

கடந்த பிப்ரவரி மாதம், தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையில், ‘கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற வீரர்கள் உள்ளிட்ட சிலருக்கு மட்டும் அளிக்கப்பட்டு வரும் சொத்து வரி மற்றும் வீட்டு வரி இவற்றின் வரிச்சலுகையானது தற்போது, அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் வழங்கப்படும் வகையில் ஆணை பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக, தமிழ்நாடு அரசு இன்று (13-03-24) அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ‘நடப்பு நிதியாண்டில் இருந்து அனைத்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் சொத்து வரி, வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இந்த விலக்குகளை பெற இந்த ஐந்து நிபந்தனைக்குள் இடம்பெற வேண்டும். முன்னாள், ராணுவ வீரர்கள் நிரந்தரமாக தமிழகத்தில் குடியிருப்பவராக வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்கள் குடியிருக்கும் கட்டடத்துக்கு மட்டும் இச்சலுகை வழங்கப்படும்.

அவர்கள் வருமான வரி செலுத்துபவராக இருக்கக் கூடாது. ராணுவ வீரர்கள், தங்களுடைய பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு மறுவேலைவாய்ப்பு திட்டத்தில் மத்திய அல்லது மாநில அரசின் பணியில் வேலை செய்பவராக இருக்கக்கூடாது. மறுவேலைவாய்ப்பில் ஓய்வுபெற்று ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது.  இந்த திட்டத்தின் மூலம், 1.20 லட்சத்துக்கும் அதிகமான முன்னாள் ராணுவ வீரர்கள் பயன்பெறுவார்கள்’ என்று தெரிவித்துள்ளது.

Next Story

மொபைல் முழுக்க ஆபாசப் படம்; ராணுவ வீரர் கைது

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Soldier arrested in thiruchy

திருச்சியில் பெண்களை ஆபாசமாகப் படம் பிடித்து செல்போனில் வைத்திருந்ததாக ராணுவ வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் ஜெய பாலாஜி. இவர் குஜராத் மாநிலம் மீரட் நகரில் ராணுவ வீரராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு ஜெய பாலாஜி வந்திருந்த நிலையில், பெண்கள் சிலரை ஆபாசமாகப் படம் எடுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசாருக்கு சிலர் புகார் அளித்திருந்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் ராணுவ வீரர் ஜெய பாலாஜியை பிடித்த போலீசார் அவருடைய செல்போனை வாங்கிப் பார்த்தனர். அதில் பல பெண்களின் ஆபாசப் படங்கள் இருந்தது போலீஸாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ராணுவ வீரர் ஜெய பாலாஜியின் மனைவி சென்னையில் காவல்துறையில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தகுந்தது.