பகலிரவு டெஸ்டில் வெற்றி: தொடரை வென்றது இந்தியா!

மேற்குவங்கம் மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா- வங்கதேசம் அணிகள் இடையிலான 2- வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்று (22.11.2019) முன்தினம் தொடங்கியது. பகல்- இரவு ஆட்டமாக பிங்க் நிற பந்தில் நடத்தப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்டில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 106 ரன்னில் சுருண்டது.

india and Bangladesh test match india record achievement kolkata

வங்கதேசத்திற்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட தொடரை முழுமையாக கைப்பற்றியது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 106, இரண்டாவது இன்னிங்சில் 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. வங்கதேச அணி தரப்பில் முஸ்பிகுர் 74, மெஹ்முதுல்லா 39, அல் அமீன் 21 ரன்கள் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 5, இஷாந்த் சர்மா 4 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டனர்.

india and Bangladesh test match india record achievement kolkata

தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றியை பெற்று இந்திய அணி சாதனை படைத்துள்ளது. மேலும் தொடர்ச்சியாக நான்கு டெஸ்ட் போட்டிகளில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற முதல் அணி என்ற பெருமையை இந்திய அணி பெற்றுள்ளது. அதேபோல் டெஸ்டில்தொடர்ச்சியாக 7 போட்டிகளை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி.

இந்தூரில் நடந்த முதல் டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டியிலும் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

india vs banladesh kolkata TEST MATCH World Record
இதையும் படியுங்கள்
Subscribe