
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியை பிரதமர் மோடியுடன் சேர்ந்து நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பனிஸும் கண்டுகளிக்கிறார்.
நேற்று விமானத்தின் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத் வந்த ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பனிஸ், சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று அங்குள்ள காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தினார். இந்த நிலையில், இன்று நடைபெறும் டெஸ்ட் போட்டியைக் காண வந்துள்ள இரு பிரதமர்களுக்கும் மைதானத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டன்களுக்கும் பிரதமர்கள் தலையில் கேப் அணிவித்து போட்டியை தொடக்கி வைத்தனர்.