உலகைஅச்சுறுத்தி வரும் கரோனாதொற்று நோய்க்குஏற்கனவே அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில்தடுப்பூசிமக்களின் பயன்பாட்டிற்குவந்துவிட்டன. ஏற்கனவே பைசர்தடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ள அமெரிக்காமற்றும் கனடாநாடுகள், இரண்டாவததாக மாடர்னாதடுப்பூசிக்கு அனுமதியளித்துள்ளன.
இந்தியாவில்கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு உள்ள தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதேபோல்இங்கிலாந்து நாட்டின்ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவும் இணைந்து ஒரு தடுப்பூசியை தயாரித்துள்ளன. குறைந்தவிலையில், பாதுகாக்க எளிதான வகையில்உருவாகியுள்ள இந்த தடுப்பூசிக்கு, அனுமதி கோரிஇங்கிலாந்து நாட்டின் சுகாதாரகட்டுப்பாட்டாளரிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கக்கோரி, இந்திய மருந்து தர கட்டுப்பாட்டுஅமைப்பிடம்விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தடுப்பூசிகுறித்த முழு விவரங்களும் அந்த அமைப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த தடுப்பூசிக்கு விரைவில் அனுமதியளிக்கப்படும் எனதகவல்கள் வெளியாகிவுள்ளது.