18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மாலை 4 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 294 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 231 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இதில் மொத்தம் 80 தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் ஏழு கட்டங்களாகத்தேர்தல் நடைபெற்றது. இந்த மாநிலத்தில் அமேதி, ரேபரேலி, வாரணாசி, மதுரா போன்ற நட்சித்திர தொகுதிகளில் ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி, நடிகை ஹேமமாலினி போட்டியிடுகின்றனர். நாட்டிலேயே அதிக தொகுதிகள் கொண்ட உத்தரப் பிரதேசத்தில் வெல்பவர்தான், மத்தியில் ஆட்சி செய்வார்கள் என்ற சொல்லாடல் கடந்த ஆண்டுகளாக இருந்து வருகிறது. அதனால், இந்த மாநிலத்தில் வெல்ல அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்து வந்தனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும் என்று பா.ஜ.கவினர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு அங்கு அதிகப்படியானஇடங்களைப்பெற்றனர். இதனையடுத்து, அங்கு ராமர் கோவில்கட்டுவதற்காகப்பூமி பூஜை செய்யப்பட்டு இந்த ஆண்டு ஜனவரிபிரமாண்டமாகக்கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கடந்த தேர்தலில் முக்கிய பங்கு வகித்த ராமர் கோவில் விவகாரம்,அங்குக்கோவில்கட்டப்பட்டதிலிருந்துஅந்த விவகாரம் எடுபடவில்லை என்றே கூறப்படுகிறது.
தொடர்ந்துசமாஜ்வாதிகட்சியும், பகுஜன்சமாஜ்கட்சியும் மாறி மாறிஆட்சியைத்தக்க வைத்துக்கொண்ட உத்தரப் பிரதேசம், கடந்த 2017ஆம் ஆண்டு பா.ஜ.க.வின் வசம் சென்றது. இதனையடுத்து, அந்த மாநிலம் பா.ஜ.கவின் கோட்டையாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில்தான், நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.கவை வீழ்த்துவதற்காகசமாஜ்வாதிகட்சி இந்தியா கூட்டணியில் இணைந்து காங்கிரஸோடுஅங்குப்போட்டியிட்டது. இன்று வாக்குப்பதிவு எண்ணப்பட்டு வரும் இந்த நிலையில், பா.ஜ.க கூட்டணி 40 இடங்களிலும், இந்தியா கூட்டணி 39 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது.
பா.ஜ.கவின் கோட்டையாக இருக்கும் உத்தரப் பிரதேசத்தை இந்தியா கூட்டணி மெல்லமெல்லத்தகர்த்து வருவதற்கானகாரணங்களாகக்காங்கிரஸ்,சமாஜ்வாதிகட்சியோடு இணைந்து போட்டியிட்டதுதான் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். அதே போல், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தயூடியூபர்துருவ்ராத்தி, பா.ஜ.கவுக்குஎதிராகத்தொடர்ந்து பேசி வருகிறார். ஆரம்பத்தில் மோடியின் தொண்டனாக இருந்ததுருவ்ராத்தி, அதன் பின் பா.ஜ.க தில்லுமுல்லு செய்ததாகவும் அதை ஆதாரத்தோடு தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில், பா.ஜ.கவின் சரிவுக்குதுருவ்ராத்தியின்தொடர் பேச்சும் முக்கியகாரணமாகப்பார்க்கப்படுகிறது. கடும் இழுபறி போட்டி நடைபெற்று வரும் சூழ்நிலையில், இறுதி முடிவாக என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றே கூறப்படுகிறது.