ADVERTISEMENT

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை: ரஷ்யாவின் அழைப்பை ஏற்ற இந்தியா!

01:24 PM Oct 15, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆப்கானிஸ்தான் நாட்டைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், அங்கு தங்கள் இடைக்கால ஆட்சியை நடத்திவருகின்றனர். இருப்பினும் இதுவரை தலிபான்களின் அரசை எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை. அதேநேரத்தில், பாகிஸ்தான் விரைவில் தலிபான்களின் ஆட்சியை அங்கீகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தலிபான்களை அங்கீகரிக்கும் விவகாரத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளன.

அதேநேரத்தில், ஆப்கானிஸ்தானில் தாங்கள் செய்துள்ள முதலீடுகள் காரணமாக, அந்த நாட்டில் தலிபான்கள் ஆட்சி அமைத்துள்ளது குறித்து பல்வேறு உலக நாடுகள் கவலையடைந்துள்ளன. மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகள், தலிபான்களால் தங்கள் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என கவலையடைந்துள்ளன. இந்தச் சூழலில், வரும் 20ஆம் தேதியன்று தலிபான்களைப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரஷ்யா அழைத்துள்ளது.

இந்தநிலையில், இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளுமாறு இந்தியாவிற்கும் ரஷ்யா அழைப்பு விடுத்தது. அதனை தற்போது இந்தியா ஏற்றுக்கொண்டு தலிபான்களுடனான பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளது. இதனை இந்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு இணைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுப்பலாம் என கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT