Advertisment

75 வது சுதந்திர தினம்... செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றினார் மோடி!

75th Independence Day ... Modi hoisted the national flag at the Red Fort!

இந்தியாவின் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் அரசு அலுவலகங்களில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற இருக்கும் நிலையில், டெல்லியில் செங்கோட்டை பகுதிக்கு தேசியக்கொடிஏற்றுவதற்காக இந்திய பிரதமர் மோடி வந்த நிலையில், மூவர்ண தேசியக் கொடியை ஏற்றும் முக்கிய நிகழ்வு தற்போது நடைபெற்றது. முன்னதாக மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி செங்கோட்டையில் முப்படை வீரர்களின் அணிவகுப்பு ஏற்றார்.

Advertisment

75th Independence Day ... Modi hoisted the national flag at the Red Fort!

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள் மற்றும் பல்வேறு நாடுகளின் தூதர்கள், அதேபோல் இந்த முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கங்களை வென்ற இந்திய வீரர்கள் அனைவருமே சமூக இடைவெளியுடன் குழுமியுள்ளனர். பிரதமர் நரேந்திரமோடி மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதன்பிறகு அவரது சுதந்திர தின உரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

modi independence day. India
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe