Advertisment

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு!

நாட்டின் 73- வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தலைநகர் டெல்லி உள்பட நாடு முழுவதும் உச்ச கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி நாளை டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றுகிறார். இதனால் செங்கோட்டை முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் பிரதமர் இல்லம், குடியரசுத்தலைவர் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisment

INDIA 73TH INDEPENDENCE DAY ALL OVER STATES SECURITY HIGH ALERT ALONG WITH DELHI

அதனை தொடர்ந்து மக்கள் அதிகம் கூடும் இடங்களான ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிர சோதனையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்த முடிவால், பதற்றமான சூழல் காணப்படுவதால் வரலாறு காண அளவிற்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் தனது சுதந்திர தின உரையில் காஷ்மீர் மாநில மக்களுக்காக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. காஷ்மீரிலும் சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாடும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

Advertisment

73TH INDEPENDENCE DAY Celebration India SECURITY HIGH ALERT tomorrow
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe