a

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள குவேம்புநகரைச் சேர்ந்த அபிஷேக்(25) மைசூரில் பி.இ. கம்யூட்டர் சயின்ஸ் முடித்த பின்னர், மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். கலிபோர்னியாவின் சான் பெர்னார்டினோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டே, பகுதி நேர வேலையாக சாலையோர உணவு விடுதியில் பணிபுரிந்து வந்தார்.

Advertisment

இந்நிலையில் நேற்று முன் தினம் அந்த உணவு விடுதியில் திடீரென நடந்த துப்பாக்கிச்சூட்டில் அபிஷேக் கொல்லப்பட்டார். இது பற்றிய தகவல் அறிந்ததும் குடும்பத்தினர் அதிர்ந்தனர். அபிஷேக் இறந்தது உறுதியாக தெரிந்ததும் அக்குடும்பத்தினர் பெரும் துயரத்தில் உள்ளனர். அபிஷேக்கின் உடலை வாங்க அவரது சகோதரர் அமெரிக்கா சென்றுள்ளார்.