Independence Day modi speech

இந்திய திருநாட்டின் 74 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.டெல்லியில் நடந்த சுந்தந்திரதின விழாவில்பாரத பிரதமர்மோடி செங்கோட்டையில் தேசிய கோடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார்.

டெல்லியில் நடக்கும் சுதந்திர தின விழாகரோனாநடவடிக்கை காரணமாகஎளிமையாககொண்டாடப்படுகிறது. முப்படை அணிவகுப்பு,பலதுறை சாதனை வாகன அணிவகுப்பு, கலைநிகழ்ச்சிகள் இன்றி இந்த வருடம் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது. 300 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள். 4 அடுக்கு பாதுகாப்பு, 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.முன்னதாகமுப்படையினரின் அணிவகுப்பை பார்வையிட்டார். மத்திய அமைச்சர்கள், பாஜகவினர், சமூக ஆர்வலர்கள்உள்ளிட்டோர் நான்காயிரம் பேர் சமூக இடைவெளியுடன் இந்த நிகழ்ச்சியை கண்டு களித்து வருகின்றனர். பாரத பிரதமர்மோடி செங்கோட்டையில் தேசிய கோடியை ஏற்றி வைத்து வணக்கம் செலுத்தினார்.

Advertisment

இந்த நிலையில் செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்திய பிரதமர்மோடி, அதன்பின் மக்களுக்கு உரையாற்றுகையில்,

Independence Day modi speech

Advertisment

நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்து. நம் நாடு சுதந்திரம் அடைய பாடுபட்டவர்களைமனப்பூர்வமாக நினைவில் கொள்ளவேண்டும். நாடு சுதந்திரமடைய தங்களது உயிரை தியாகம் செய்தவர்களை சுதந்திர வேட்கையோடு நினைவு கூறவேண்டும். இளைஞர்கள் 20 வயது ஆனாலே சொந்த காலில் நிற்க வேண்டும் என பெரியவர்கள் அறிவுறுத்துவார்கள். நாடு சுதந்திரம் பெற்று 74ஆண்டுகள் ஆக உள்ள நிலையில், இந்தியா சொந்த காலில் நிற்க வேண்டும். சுயசார்பு இந்தியாவை நோக்கி நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது. உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு அதிகரிக்க வேண்டும்.பொருளாதார வளர்ச்சியுடன்,மனிதத் தன்மையும் மையமாக வைத்து நாம் செயல்பட வேண்டும்.

பழமொழிகள், பல பிராந்தியங்களிலும் ஒற்றுமையாக போராடியதால் தான் சுதந்திரம் பெற முடிந்தது. உலகை வழிநடத்த கூடிய இடத்தில் இந்தியா வர வேண்டும்.நமது விவசாயத் துறையின் கட்டமைப்பை தரமுயர்த்த வேண்டியுள்ளது. இந்திய விவசாயிகள் உலகுக்கு எடுத்துக்காட்டாக உள்ளனர். விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். நாட்டின் எந்த ஒரு பகுதியும் பின்தங்கி விடக்கூடாது. நம் முன் பல்வேறு சவால்கள் உள்ளன அவற்றை தாண்டி வெற்றி பெறும் சக்தி நம்மிடம் உள்ளது.நம்மிடம் முன்பு வெண்டிலேட்டர் இல்லாமல் இருந்தன. தற்போது அவற்றை நாம் தயாரிக்கிறோம். உள்ளூர் தயாரிப்புக்கு குரல் கொடுப்போம் என்பதேஇனி நாம் உச்சரிக்க வேண்டிய மந்திரம். இன்று உலக நாடுகள் இந்தியாவை நம்பிக்கையுடன் பார்க்கின்றன. கரோனா தடுப்பது மருந்து தொடர்பான சோதனைகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைவருக்கும் கரோனாதடுப்பூசி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கரோனாவுக்கு எதிராக போராடும் முன் களப்பணியாளர்களைநாம் நினைவு கொள்ள வேண்டும். நாட்டில் பல்வேறு இடங்களில்மழை, நிலச்சரிவுஉள்ளிட்ட காரணங்களால் போர்க்களமாக உள்ளது.மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். கரோனாவுக்கு எதிரான போரில் நிச்சயம் வெல்வோம்என்றார்.