/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/indane33.jpg)
இண்டேன் வீட்டு உபயோக கேஸ்சிலிண்டரைப் புக்கிங் செய்வதற்கு 'மிஸ்டுகால்' வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "இண்டேன் வீட்டு உபயோக கேஸ்சிலிண்டரைப் புக்கிங் செய்வதற்கும், புதிய சிலிண்டர் இணைப்புகளைப் பெறுவதற்கும் 'மிஸ்டுகால்' வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, கேஸ்சிலிண்டர் புக்கிங் செய்யவும், புதிதாக கேஸ்சிலிண்டர் இணைப்பு பெறவும் வாடிக்கையாளர்கள் தங்களின்பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் இருந்து 84549 55555 என்ற எண்ணுக்கு 'மிஸ்டுகால்' தரலாம். இந்த வசதி கிராமங்களில் உள்ள மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்தியாவில் எங்கிருந்தாலும் கேஸ் சிலிண்டரைப் புக்கிங் செய்ய முடியும்" என்று தெரிவித்துள்ளது.
முன்னதாக இண்டேன் வீட்டு உபயோக கேஸ்சிலிண்டரை புக்கிங் செய்வதற்கு ஐ.வி.ஆர்.எஸ் (IVRS) வசதி இருந்தது. இந்த வசதி பொதுமக்களுக்கு சற்று சிரமமாக இருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், 'மிஸ்டுகால்' வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)