இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என் - 32 விமானப்படை பயணிகள் விமானம் காணாமல் போயுள்ளது.

Advertisment

indaian air force flight went missing near assam

Advertisment

அசாமின் ஜோர்காட்டிலிருந்து 12:24 மணிக்கு இந்த விமானம் புறப்பட்டு சென்றுள்ளது. விமானத்தில் 5 பயணிகள், 8 பணியாளர்கள் என 13 பேர் இருந்துள்ளனர். அருணாச்சல பிரதேச மாநிலத்தில் தரையிறங்க வேண்டிய விமானம் ரேடார் இணைப்பில் இருந்து விலகியுள்ளது. மதியம் 1 மணிக்கு பிறகு விமானம் தொடர்பை இழந்துள்ளது.

இதனையடுத்து விமானப்படை விமானங்கள் காணாமல் போன இந்த விமானத்தை தேடும் பணியை தொடங்கியுள்ளன. சுகோய் 30, சி 130 விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளது. சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து கடந்த 2016 ஆம் ஆண்டு 29 பேருடன் இதே ரக விமானம் புறப்பட்டு சென்ற போது மாயமானது என்பது குறிப்பிடத்தக்கது.