Increasing corona exposure in India!

இந்தியாவில் அண்மையில் குறைந்திருந்த கரோனா நோய்த்தொற்று மக்களைச் சற்று நிம்மதி அடையச் செய்தது. ஆனால், கரோனா நோய்த்தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி நான்காம் அலைக்கான அறிகுறியாக உருவெடுத்திருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் இந்தியாவில் கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.

Advertisment

ஜூன் மாதம் நான்காவது அலை தொடங்கும் என கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்தப்படி மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே கரோனா நோய்த்தொற்றின் எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது. இரண்டாவது அலையில் ஏற்பட்ட பாதிப்பு போல மீண்டும் ஏற்படாமல் இருக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

கரோனா பரவல், தீவிரமடையாமல் இருக்க, பரிசோதனைகளை அதிகரிக்கவும், தொற்றுகளை விரைந்துக் கட்டுப்படுத்தவும், கரோனா மரபணு பகுப்பாய்வு செய்யவும், தடுப்பூசிப் போடுவதை அதிகரிக்கவும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு மருத்துவத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியைக் கடைபிடித்தல், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தல் என மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடும் முயற்சியினால் கரோனா வைரஸ் பரவல் வெகுவாகக் குறைந்து காணப்பட்டதால், மூன்றாவது அலை பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

தற்போது மீண்டும் அதிகரிக்கும் கரோனா பரவல் ஏற்படுத்தும் தாக்கத்தைத் தடுக்க மக்கள் மீண்டும் தடுப்பு நடவடிக்கைளைக் கடைபிடிப்பது அவசியம் ஆகும்.