narendra singh tomar

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று காணொளி வாயிலாக நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்தவகையில், சம்பா பருவ பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தவும்மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisment

இதன்படி2021-22 ஆம் நிதியாண்டில் சாதாரண வகை நெல்லின் குறைந்தபட்சஆதார விலை ஒரு குவிண்டாலுக்கு 72 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கடந்த நிதியாண்டில் 1868 ஆக இருந்த நெல்லின் குறைந்தபட்சஆதார விலை, 1,940 ரூபாயாக அதிகரித்துள்ளது. அதேபோல் எள்ளின் குறைந்தபட்சஆதார விலை குவிண்டாலுக்கு 452 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisment

மேலும், உளுந்து மற்றும் துவரை ஆகிய பயிர்களின்குறைந்தபட்சஆதார விலை, ஒரு குவிண்டாலுக்கு 300 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனைமத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்தார்.