/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/narendra mo43434.jpg)
டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இன்று (27/05/2022) காலை 11.00 மணிக்கு நடைபெற்ற விழாவில், 'பாரத் ட்ரோன் மஹோத்சவ் 2022' என்ற பிரமாண்ட ட்ரோன் திருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி நேரில் தொடங்கி வைத்தார். இந்த திருவிழா இரண்டு நாட்கள் நடைபெறவுள்ளது.
விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "மத்திய அரசின் சிறந்த கொள்கைகளால் இந்தியாவில் ட்ரோன் பயன்பாடு அதிகரித்துள்ளது. உலகளவில் ட்ரோன் பயன்பாடு அதிகமுள்ள மையமாக இந்தியா மாறி வருகிறது. விவசாயம், மீன்பிடி தொழில் போன்றதுறைகளில் ட்ரோன்கள் சிறப்பான பலனை தரும். வயல்களில் பூச்சி மருந்து தெளிப்பது போன்ற பணிகளை ட்ரோன்கள் மிகவும் எளிமையாக செய்கின்றன. ஏழை, எளிய மக்களுக்கு உதவும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.
விழாவில், மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Follow Us