ADVERTISEMENT

"டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு"- பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்!

10:57 PM Apr 24, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT


'மன் கி பாத்' என்ற வானொலி நிகழ்ச்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே இன்று (24/04/2022) காலை 11.00 மணிக்கு உரையாற்றினார்.

ADVERTISEMENT

அப்போது அவர் கூறியதாவது, "மார்ச் மாதத்தில் ரூபாய் 10 லட்சம் கோடி வரை யூபிஐ (UPI) டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது. நாள்தோறும் ரூபாய் 20,000 கோடி ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகள் நடைபெறுகிறது. சிறிய உணவகங்கள், பழக்கடைகளில் கூட டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செயல்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் பரிவர்த்தனையால் பணத்தை எடுத்துச் செல்லவோ, ஏடிஎம்மை தேடி அலையவோ இனி தேவையில்லை.

ஒருநாள் முழுவதும் கையில் காசு எடுத்துச் செல்லாமல் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்த முடியும். ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தாமல் ஒருநாள் முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவத்தை உணர வேண்டும். கோடை வெயில் அதிகரித்து வரும் நிலையில் நாம் நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டும். தண்ணீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவோர் குறித்து நாம் சிந்திக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருகின்றனர்" என்றார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT