Skip to main content

ரூ.1 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டுவோர்களின் எண்ணிக்கை 68% ஆக அதிகரித்துள்ளது - மத்திய நேரடி வரிகள் வாரியம்

Published on 23/10/2018 | Edited on 23/10/2018

 

ii

 

இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கும் மேல் வரி செலுத்துவோர்களின் எண்ணிக்கை கடந்த நான்கு ஆண்டுகளில் 60% அதிகரித்து வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.40 இலட்சமாக உயர்ந்துள்ளதாக மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது. 2014-2015 நிதியாண்டில் 88,649 பேர் ரூ.1 கோட்டிக்கும் மேல் வருவாய் ஈட்டுவதாக வரிக்கணக்குத் தாக்கல் செய்துள்ளனர். இது 2017-2018 நிதியாண்டில் 1,40,139 ஆக உயர்ந்துள்ளது. இதில் பெருநிறுவனங்கள், நிறுவனங்கள் போன்றவை அடக்கம். 

 

அதே சமயம் தனிநபர் பிரிவில் ரூ.1 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டுவோர்களின் எண்ணிக்கை 68% அதிகரித்துள்ளது. 2014-2015 நிதியாண்டில் 48,416 ஆக இருந்த ரூ.1 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டுவோர்களின் தனி நபர் வரி கணக்கு 2017-208 நிதியாண்டில் 81,344 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்