Advertisment

உத்தரப்பிரதேச தேர்தல்: சமாஜ்வாடி கட்சியை குறிவைத்து வருமான வரி சோதனை! 

Advertisment

it raid

உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள நிலையில், தற்போதிலிருந்தே அம்மாநிலத்தில் தேர்தலை எதிர்கொள்வதற்கானபணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. பாஜக, சமாஜ்வாடி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றன.

Advertisment

இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில், சமாஜ்வாடி கட்சியின்தேசியச் செயலாளரும் செய்தி தொடர்பாளருமான ராஜீவ் ராய் வீட்டில் வருமான வரி சோதனைநடைபெற்றுவருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராஜீவ் ராய் வீட்டின் முன்னர் சமாஜ்வாடி கட்சித் தொண்டர்கள் கூடி, சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.

மேலும், சமாஜ்வாடிதலைவர் அகிலேஷ் யாதவுக்கு நெருக்கமானவர்களாகக் கருதப்படும் இரண்டு தொழிலதிபர்களின் வீட்டிலும்வருமான வரி சோதனை நடைபெற்றுவருகிறது.

Samajwadi uttarpradesh
இதையும் படியுங்கள்
Subscribe