Published on 16/10/2019 | Edited on 17/10/2019

ஆந்திர மாநிலம் சித்தூர் வரதபாளையத்தில் உள்ள கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சித்தூரில் உள்ள கல்கி ஆசிரமத்தில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. கோவர்தனத்தில் கல்கி மகன் கிருஷ்ணனுக்கு சொந்தமான அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் சோதனையில் இறங்கியுள்ளனர்.