புராண கதைகளில் நாம் கேள்விப்பட்டிருப்போம் ' அட்சய பாத்திரம்'. என்ற வார்த்தையை.அதாவதுஅள்ளஅள்ள குறையாமல் பணம், உணவு பொருட்களைதரும்பாத்திரம் என்று கதைகளில் கேள்விப்பட்டிருப்போம்.அப்படிபட்ட பாத்திரம் தன்னிடம் உள்ளதாகவும், நினைத்த போதெல்லாம் அந்த பாத்திரத்தில் பணம், தங்கம்புதையலாக வரும் எனசதுரங்க வேட்டை திரைப்பட பாணியில்தொழிலதிபரை ஏமாற்றிய கும்பலைகைதுசெய்திருக்கிறது காவல்துறை.

Advertisment

police

திருப்பதி அருகில் உள்ள திருப்பத்தூர் என்ற இடத்தில்நடந்திருக்கிறது இந்த வினோதமோசடி. திருப்பதி,திருப்பத்தூரை சேர்ந்ததொழிலதிபர் நவீன்என்பவரிடம் வந்தகும்பல்ஒன்று தங்களிடம் அட்சய பாத்திரம் உள்ளதாகவும், நினைத்தபோதெல்லாம் அதில்பணம், நகை வரும் எனகூறி அணுகியுள்ளனர்.அதனை நிரூபிக்கும் வகையில்சித்தூர்அருகே நவீனை அழைத்து சென்றுஏற்கனவே மறைத்து வைக்கப்பட்டிருந்த பெட்டியில் சில நகைகளைஎடுத்துக்காட்டி நம்ப வைத்துள்ளனர். இதைஉண்மை என்று நம்பியநவீன்குடிப்பள்ளி என்ற இடத்தில்வைத்து சுமார்2.10கோடிரூபாய்கொடுத்துஅந்த பெட்டியை வாங்கியுள்ளார்.

incident in thirupathi... police arrest

Advertisment

பூஜையில் வைத்து பின்னர் திறந்து பாருங்கள் எனஆருடம் கூறிவிட்டுமறைந்தது அந்த கும்பல்.இதனை நம்பி பூஜையில் பெட்டியைதொழிலதிபர் நவீன்வைத்து விட்டு உள்ளே திறந்து பார்த்துள்ளார். ஆனால் உள்ளே ஒன்றும் இல்லை இதனால்அதிர்ந்து போன நவீன்அந்த பெட்டியைபல இடங்களில் வைத்து சோதனை செய்தும்பணம் நகை வராததால்பணம் கொடுத்தஇடமானகுடிப்பள்ளியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

police

இந்த வினோதபுகாரை ஏற்றுக்கொண்ட போலீசார்தனிப்படை அமைத்துவிசாரணையை தீவிரப்படுத்தி வந்த நிலையில்,குடிப்பள்ளி ரயில்நிலையத்தின் அருகே 8 பேர் கொண்ட கும்பலை கைது செய்து, ஒவ்வொருவர் வீட்டிலும்இரண்டாயிடம்,ஐநூறுரூபாய் நோட்டுகள்என கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்தனர். மொத்தம் 1.29 கோடிரூபாய் ரொக்கம், இரண்டு கார்கள், ஒரு இருசக்கர வாகனம் எனமொத்தமாக அவர்களிடம்பறிமுதல் செய்தனர்.

Advertisment

police

கிருஷ்ணகிரி சேகர், ராமச்சந்திரா,காஞ்சிபுரம் விநாயகம்,கர்நாடகாவை சேர்ந்த5 பேர் என மொத்தம் 8 பேரையும் போலீசார்கைது செய்துள்ளனர். இந்த நவீன காலத்திலும் அட்சய பாத்திரம் எனஒன்று இருப்பதாக நம்பி ஏமார்ந்த சம்பவம்சற்று அதிர்ச்சியைத்தான் கிளப்பியுள்ளது.