திருமணத்திற்கு ஆடை வாங்க சென்ற மணப்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம்தெலுங்கானாவில் நடந்துள்ளது.
தெலுங்கானாமகபூப்நகர் அருகே மிர்மிட்டாவில் இன்று (30.01.2021) திருமணத்திற்கு ஆடை வாங்குவதற்காக மணப்பெண் பிரமிளா உறவினர்களுடன் ஆட்டோவில் சென்றுகொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்தலாரி மோதியதில்ஆட்டோவிலிருந்தமணப்பெண் பிரமிளாஉட்பட 6 பேரும்சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 10 நாட்களில்திருமண நடைபெற இருந்தநிலையில்மணப்பெண் உயிரிழந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தைக் கண்டித்துமணப்பெண்ணின்உறவினர்கள் தற்போது சாலை மறியல்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.