Advertisment

செம்மரக் கடத்தலை தடுத்த காவலருக்கு நேர்ந்த சோகம்; கடத்தல்காரர்கள் வெறிச்செயல்

incident for redwood issue in andhra police ivloved 

ஆந்திரா மாநிலம் திருப்பதி அருகே உள்ள அண்ணமய மாவட்டம் கே.வி. பள்ளி மண்டலத்திற்கு உட்பட்ட குன்றோவாரி பள்ளி சந்திப்பு அருகே செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவலர்கள் வழக்கம் போல் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 5 பேர் கொண்ட செம்மரக்கடத்தல் கும்பல் ஒன்று கர்நாடக மாநில பதிவெண் கொண்ட காரில் வேகமாக வந்துள்ளனர்.

Advertisment

இந்த காரை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் நிறுத்த முயன்றுள்ளனர். ஆனால் காரில் வந்தவர்கள் காரை நிறுத்தாமல் செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை காவலர் பி. கணேஷ் (வயது 30) என்பவர் மீது மோதிவிட்டு வேகமாக தப்பிச் சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தில் காவலர் கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் இருந்த 3 கடத்தல்காரர்கள் தப்பி ஓடிய நிலையில் இருவரை பிடித்த போலீசார் அவர்களிடம் திவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisment

மேலும் காரில் இருந்த 7 செம்மரக்கட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தப்பிச் சென்ற 3 கடத்தல்காரர்களை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். செம்மரக்கடத்தலை தடுப்பதற்காக சென்ற போலீசார் மீது கார் ஏற்றிய சம்பவத்தில் போலீசார் பலியாகியுள்ள சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

redwood police Andhra
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe