incident in puducherry prison

புதுச்சேரி வாணரப்பேட்டை பகுதியை சார்ந்தவர் பிரபல ரௌடி மணிகண்டன். தனக்கு எதிராக செயல்படுபவர்களையெல்லாம் கொலை செய்து வந்ததால் 'மர்டர் மணிகண்டன்' என்றே அழைக்கப்படுகின்றார். பல்வேறு கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதால், புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறை சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இன்று (08.07.2020) மர்டர் மணிகண்டனுக்கு பிறந்தநாள் என்பதால் அவரது ஆதரவாளர்கள் மற்றும் சில குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர்கள் அவரது ஆதரவை பெரும் வகையில் பிறந்தநாள் வாழ்த்துகள் கொண்ட வீடியோவை தயாரித்து வெளியிட்டனர்.தற்போது அந்த வீடியோக்கள்அனைத்து சமூக வலைதளங்களிலும் பரவி வருகின்றது.

Advertisment

incident in puducherry prison

Advertisment

தற்போது ஊரடங்கு என்பதால் பேனர், போஸ்டர் ஒட்டி வாழ்த்து கூறமுடியாத நிலையில், வாழ்த்துகள் அனைத்தும் தற்போது சமூக வலைதளத்திலேயே பகிரப்பட்டு வருகின்றது. இதுகாவல்துறையினர் கவனத்திற்கு வந்ததை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.