புதுச்சேரி அரியாங்குப்பத்தை சேர்ந்த தனலட்சுமி (30) என்ற பெண் சின்னக்கடை வீதியில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் வேலை செய்து வந்தார். அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில் பெற்றோர் திருமண ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டிலிருந்த அந்த பெண் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டுஓடி வந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பாக தனலட்சுமி நீதிபதி சிவக்குமாரிடம் மரண வாக்குமூலம் கொடுத்தார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
அந்த வாக்குமூலத்தில் அந்தன் பெண் கூறியதாக போலீஸ் தரப்பில் கூறியயதாவது,
புதுச்சேரி வம்பாகீரப்பாளையத்தை சேர்ந்த மதுரை (37) என்பவர் நடத்தி வந்த ஸ்டூடியோவில் தனலட்சுமி வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு உணவிலும், குளிர்பானத்திலும் மயக்க மருந்து கலந்து கொடுத்து அந்த பெண்ணை மதுரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுபற்றி தெரியவந்து அவருக்கே அந்த பெண்ணை திருமணம் செய்து வைப்பது என முடிவு செய்து பெற்றோர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது தான் மதுரைக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதனால் அதிர்ச்சி அடைந்து அந்த பெண் தற்கொலை முடிவை தேடிக் கொண்டதாக நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். ஸ்டூடியோ உரிமையாளர் மதுரைக்கு சட்டப்படி தண்டனை வாங்கித்தர வேண்டும் என்று உறவினர்கள் முறையிட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அரியாங்குப்பம் போலீசார் வழக்குபதிவு செய்து தலைமறைவாகவுள்ள ஸ்டூடியோ உரிமையாளர் மதுரையை தீவிரமாக தேடி வருகின்றனர்.