ராஜஸ்தான் மாநிலம், கோட்டா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், 12 வயது பட்டியலின சிறுவன் ஒருவன், வயர்களை திருடியதாக குற்றஞ்சாட்டி அவனை நிர்வாணப்படுத்தி நடனமாடச் சொல்லி காலணிகளால் தாக்கப்பட்ட கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து சிறுவனின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில், சிறுவனை கொடுமைப்படுத்திய ஷிட்டிஜ் குஜ்ஜர், யதாதி உபாத்யாய், ஆஷிஷ் உபாத்யாய், கெளரவ் சைனி, சந்தீப் சிங், அமர் சிங் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.