Skip to main content

பிறந்த குழந்தையின் சடலத்தை புத்தக பையில் மறைத்து வைத்து சுற்றித்திரிந்த கல்லூரி மாணவி! 

Published on 17/10/2019 | Edited on 17/10/2019

திருமணத்திற்கு முன்பு காதலனுடன் ஏற்பட்ட தவறான நெருக்கம் காரணமாக கல்லுரி மாணவி கர்ப்பமடைந்த நிலையில் 6 மாத குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையின் சடலத்தை புத்தக பையில் மறைத்து வைத்து சுற்றித்திரிந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

 

incident in kerala itukki

 

கேரள மாநிலம் இடுக்கியில் வாத்திக்குடி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி அதே கல்லூரியில் படிக்கும் மாணவனை காதலித்து வந்துள்ளார். இதனால் அவர்கள் அடிக்கடி நெருங்கி பழகியதால் கர்ப்பம் தரித்துள்ளார் அந்த கல்லூரி மாணவி. இப்படி இருக்க 6 மாத கர்ப்பிணியாக இருந்த அந்த மாணவி அதனை வீட்டில் சொல்லாமல் மறைத்து வைத்திருந்த நிலையில் நேற்று காலை உறவினர் ஒருவருக்கு வாட்ஸப்பில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் அந்த மாணவி. அந்த குறுஞ்செய்தியில் தனக்கு குழந்தை பிறந்துவிட்டதாகவும், அதனை தனது புத்தக பையில் வைத்து சுற்றித் திரிவதாகவும் கூறியுள்ளார்.

 

incident in kerala itukki

 

இதனை படித்துப்பார்த்த அந்த சிறுமியின் உறவினர் இந்த அதிர்ச்சி தகவலை அந்த சிறுமியின் பெற்றோருகளிடம் தெரிவித்துள்ளனர். இதனை அறிந்த வாத்திக்குடி போலீசார் அந்த சிறுமியின் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தியதில் அந்த சிறுமியின் புத்தக பையில் பிளாஸ்டிக் கவரில் சுற்றப்பட்ட நிலையில் குழந்தையின் சடலத்தை கண்ட போலீசார் அந்த சிறுமியின் மீது கொலை வழக்குபதிவு செய்துள்ளனர்.

மேலும் அந்த சிறுமியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கல்லூரியில் உடன் படித்த மாணவனால் கர்ப்பமடைந்ததாகவும், கர்ப்பமடைந்து 6 மாதம் ஆன நிலையில் குளியறையில் குறை பிரசவத்தில் குழந்தை இறந்தே பிறந்ததாகவும் தெரிவித்துள்ளார். அதோடு மட்டும்மல்லாமல் தன்னை கர்ப்பமாக்கிய அந்த இளைஞனுக்கு அண்மையில் வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றதாகவும், சில நாட்களுக்கு முன்பு அந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டதகாவும் தெரிவித்துள்ளார்.

 

incident in kerala itukki

 

காதலனுடன் ஏற்பட்ட தவறான நெருக்கம் காரணமாக கர்ப்பமடைந்த கல்லுரி மாணவி பிறந்த குழந்தையின் சடலத்தை புத்தக பையில் மறைத்து வைத்து சுற்றித்திரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சி.ஏ.ஏவை எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் (படங்கள்)

Published on 12/03/2024 | Edited on 12/03/2024

 

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சி.ஏ.ஏ) எதிர்த்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மேலும், அவர்கள் சி.ஏ.ஏ விளம்பர பதாகைகளைத் தீ வைத்து எரித்தனர்.

Next Story

படியில் தொங்கியபடி பயணம்; கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
Travel hanging on a step; 3 college students were loss their live

பேருந்தில் பயணிக்கும் சில பள்ளி, கல்லூரி மாணவர்கள் அபாயகரமாக படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் வீடியோ காட்சிகள் அண்மையாகவே சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் பேருந்தில் படியில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் விபத்தில் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருநாவலூரில் தனியார் பேருந்தின் படியில் கல்லூரி மாணவர்கள் தொங்கிக் கொண்டு பயணித்ததாகக் கூறப்படுகிறது. பேருந்து திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது பின் தொடர்ந்து வந்த கண்டெய்னர் லாரி உரசியதில் படியில் தொங்கியபடி பயணித்த மூன்று பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த கல்லூரி மாணவர்கள் காமேஷ், மோனிஷ், தனுஷ் ஆகிய மூன்று இளைஞர்களின் உடல்களும் பிரேப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.