Skip to main content

சக உறுப்பினரால் டாா்ச்சா்... கட்சி அலுவலகத்திலேயே மா.கம்யூனிஸ்ட் பெண் உறுப்பினா் தற்கொலை!

Published on 12/09/2020 | Edited on 12/09/2020

 

INCIDENT IN KERALA

 

கேரளாவில் பிணராய் விஜயன் தலைமையிலான மா. கம்யூனிஸ்ட் அரசு செயல்பட்டு வருகிறது. இன்னும் 7 மாதத்தில் தோ்தலைச் சந்திக்க இருக்கும் கேரளாவில், ஆளும் கட்சியும், எதிா்க் கட்சிகளும் தொடா்ந்து கட்சி நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா் கூட்டங்களைக் கிளைகள் வாாியாக நடத்தி வருகின்றனா். அந்த வகையில் கட்சி கூட்டத்துக்குச் சென்ற மா. கம்யூனிஸ்ட் பெண் உறுப்பினா் கட்சி அலுவலகத்துக்குள் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவனந்தபுரம் பாறசாலை அழகிகோணத்தைச் சோ்ந்தவா் ஸ்ரீகுமாா். இவருடைய மனைவி ஆஷா, மா. கம்யூனிஸ்ட் கட்சியில் 15 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்து வந்தாா். மேலும் பாறசாலை ஏாியா கமிட்டியில் கட்சிப் பணிகளை மேற்கொண்டு வந்தாா். இந்த நிலையில் வியாழக்கிழமை பாறசாலை கட்சி அலுவலகத்தில் நடந்த  கமிட்டி கூட்டத்தில் கலந்து கொண்ட ஆஷா இரவு வரை வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய கணவா் கட்சி அலுவலகம் வந்து விசாாித்து விட்டு உறவினா்கள் வீடுகளிலும் சென்று விசாாித்தாா்.

ஆஷாவை எங்கும் காணாததால் அடுத்த நாள் வெள்ளிக்கிழமை கட்சி நிா்வாகிகளோடு உறவினா்களும் தேடி வந்தனா். இந்த நிலையில் பாறசாலையில் திறக்கப்படாமல் இருந்த புதிய கட்சி அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக ஆஷா இருப்பதைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

அவருக்கு அருகில் கிடந்த கடிதத்தில், "கட்சியின் கிளைச் செயலாளா் அஸ்தன் ஜாய் மற்றும் கட்டமண்ராஜன் இருவரும் தொடா்ந்து தனக்கு டாா்ச்சா் தந்ததாலும், மேலும் இரட்டை அா்த்தத்தில் அருவறுப்பான வாா்த்தைகளால் பேசி எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வந்தனா். இது சம்மந்தமாக கட்சி மேல்மட்ட தலைவா்களுக்கு புகாா் அனுப்பியும் அவா்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

மேலும் இன்று நடந்த கட்சி கூட்டத்திலும் என்னை தவறாக பேசியதால் தற்கொலை செய்து கொள்கிறேன்" என எழுதியிருந்தார். இது கட்சியினா் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் அங்கு பொதுமக்கள் மற்றும் உறவினா்கள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து காவல்துறை மற்றும் வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி ஆஷாவின் உடலை திருவனந்தபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

 

Ad

 

இந்தச் சம்பவம் முதல்வா் பிணராய் விஜயனின் நேரடி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் பாறசாலை சப்- இன்ஸ்பெக்டா் ரதீஷ்குமாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா். மேலும் எதிா்க்கட்சி தலைவா் காங்கிரஸ் ரமேஷ் சென்னிதல, கம்யூனிஸ்ட் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல சம்பவங்கள் உணா்த்தியுள்ளது. இதில் தொடா்புடைய கம்யூனிஸ்ட் காரா்களை உடனே கைது செய்ய வேண்டும். மேலும் நோ்மையான ஒரு டி.ஜி.பியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றாா்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகன் தோற்க வேண்டும் தந்தை பேச்சு; நாய்கள் போன்றவர்கள் மகன் பதிலடி

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
competition retaliated Father Congress, son BJP in kerala

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அந்த வகையில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு உட்பட 22 மாநிலங்களுக்கு தேர்தல் நடக்கவிருக்கிறது. அதன்படி, மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் கேரளாவில்,  கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி தொடங்கி கடந்த 4ஆம் தேதி வரை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ஏ.கே.ஆண்டனியின் மகனான அனில் ஆண்டனி, பத்தனம்திட்டா மக்களவை தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிடுகிறார். கடந்த ஆண்டு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய அனில் ஆண்டனி, பா.ஜ.கவில் சேர்ந்து கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஏ.கே.ஆண்டனி, பா.ஜ.க வேட்பாளரான தனது மகன் இந்த தேர்தலில் தோல்வி அடைய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து திருவனந்தபுரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் ஏ.கே.ஆண்டனி செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, “மோடி, பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்க்கு எதிராக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் தொடர்ந்து போராடி வருகின்றனர். முதல்வர் பினராயி விஜயனின் குற்றச்சாட்டுகளை கேரள மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறேன். முதல்வர் பினராயி விஜயனை கேரள மக்கள் ஏற்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.

இந்தியா கூட்டணி ஒவ்வொரு நாளும் முன்னேறி வருகிறது. பா.ஜ.க கீழே செல்கிறது. நாங்கள் ஆட்சி அமைக்க இது ஒரு வாய்ப்பு என்று நினைக்கிறேன். பா.ஜ.க சார்பில் பத்தனம்திட்டா மக்களவை தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளரான எனது மகன் அனில் ஆண்டனி தோற்க வேண்டும். அவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஆண்டோ ஆண்டனி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும். முக்கிய காங்கிரஸ் தலைவர்களின் பிள்ளைகள் பா.ஜ.கவில் இணைந்தது தவறு. அவர்களைப் பற்றி பேச விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை குடும்பமும், அரசியலும் வேறு வேறு தான்.

காங்கிரஸ் எனது மதம். மத்தியில் ஆளும் கட்சி இந்தியா என்ற கருத்தையே அழிக்க முயல்கிறது. தயவு செய்து இதை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். கேரளாவில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 3வது இடத்திலேயே பா.ஜ.க வேட்பாளர்கள் இருப்பார்கள். சபரிமலை பெண்கள் நுழைவு சர்ச்சையால் 2019 பொதுத் தேர்தலின் போது பா.ஜ.கவின் பொற்காலம் இருந்தது. மேலும் அவர்கள் சில கூடுதல் வாக்குகளைப் பெற்றார்கள். ஆனால், இந்த ஆண்டு, பாஜகவுக்கு சாதகமாக எந்த காரணியும் இல்லை. மேலும் அவர்கள் குறைந்த வாக்குகளைப் பெறப் போகிறார்கள். நரேந்திர மோடி மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆட்சிக்கு முடிவு கட்ட காங்கிரசுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்தால், இந்திய அரசியல் சாசனம் நாசமாகி, ஜனநாயகம் முடிவுக்கு வந்து விடும். அந்த ஆபத்தை நாம் போக்க வேண்டும்” என்று கூறினார்.

முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.ஆண்டனியின் இந்த கருத்துக்கு அவரது மகனும், பா.ஜ.க வேட்பாளருமான அனில் ஆண்டனி பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “ஏ.கே.ஆண்டனி மீது பரிதாபப்படுகிறேன். அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவருக்கு வயது 84. அவர் முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தபோதும், தேச விரோத காந்தி குடும்பத்துக்காக பணியாற்றி, ஆயுதப்படைகளை அவதூறு செய்த எம்.பி.க்காக பேசி வருகிறார். காலாவதியான எண்ணங்களைக் கொண்ட சில காலாவதியான தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்காக உழைக்கின்றனர். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்காக வேலை செய்பவர்கள் நிலவை பார்த்து குரைக்கும் நாய்கள் போன்றவர்கள்” என்று பேசினார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரின் கருத்துக்கு அவரது மகனான பா.ஜ.க வேட்பாளர் பதிலடி கொடுத்தது கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

'தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்குக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் இருக்கும்'- பிரகாஷ் காரத் பேச்சு

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
'Marxist Communist will support Tamil Govt's ongoing case'- Leadership Committee Member Prakash Karath Speech

தி.மு.க கூட்டணி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தம் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவு திரட்டும் வகையில்  ஒட்டன்சத்திரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி மற்றும் நகர செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினார். திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் பாலபாரதி, அவை தலைவர் மோகன், முன்னாள் நகர்மன்ற தலைவர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் எஸ்.ஆர்.கே. பாலு உள்பட தோழர்கள் முன்னிலை வகித்தனர்.

இதில் பிரகாஷ் கரத் பேசுகையில், 'மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்தின் மீது மிகப்பெரிய தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்திய நாடு என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதாகும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் மொழி இருக்கிறது. கலாச்சாரம் இருக்கு பண்பாடு இருக்கிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும் சமூக கட்டுப்பாடு இருக்கிறது. இவை அனைத்தும் இணைந்தது தான் இந்தியா என்கிற ஒரு மகத்தான நாடாக இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ், பிஜேபி இந்தக் கட்டமைப்பையும் இந்த ஒருமைப்பாட்டையும் சீர்குலைத்து இந்தியாவை ஒற்றை நாடாக ஒரு எதேச்சை அதிகாரம் நாடாக மாற்ற விரும்புகிறேன். நம்முடைய கலாச்சார பன்முகத்தன்மையை அழிந்து ஒரே கலாச்சாரம் ஒரே மொழி ஒரே தலைவர் என்ற சூழ்நிலையை உருவாக்க பாஜக முயன்று வருகிறது.

மத்திய அரசு ஆளுநரை வைத்து அனைத்து துறைகளிலும் தலையீடு செய்கின்றன ஒரு மோசமான சூழ்நிலை உள்ளது. மாநில அரசுகளுக்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தராமல் நிறுத்தி வைத்துள்ளது. இதனால் மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்கள் மாநில அரசுகளால் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் நிலைமை கேரளாவிலும் உள்ளது. மத்திய அரசின் செயலை கண்டித்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் உரிய நிதி வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி வழக்கு தொடர்ந்துள்ளது. அதேபோல் தமிழக அரசும் மத்திய அரசு மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இதற்கு ஆதரவாக உறுதுணையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கும். மாநிலங்களுக்கு நிதியை வழங்க மறுப்பது கூட்டாட்சி தத்துவத்தை மறுப்பது ஆளுநர்களைக் கொண்டு ஆட்சியில் தலையிடுவது போன்றவற்றை தடுத்து நிறுத்தக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

மோடி அரசாங்கம் ஊழலின் மொத்த உருவமாக உள்ளது என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. மெகா ஊழலாக தேர்தல் பத்திரம் மோசடி ஊழல் நடைபெற்று உள்ளது. தேர்தல் பத்திரம் மூல மாக கார்ப்பரேட் நிறுவனங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு 50 சதவீதத்திற்கும் மேலாக வழங்கி உள்ளன. தேர்தல் பத்திரம் மூலமாக 8,752 கோடி வாரி சுருட்டி உள்ளது பாரதிய ஜனதா கட்சி. இந்த மெகா ஊழலை மத்திய அரசு எப்படி செய்து உள்ளது என்றால் அமலாக்குத்துறை, மத்திய விசாரணை முகமைகளை கொண்டு சோதனை நடத்துவது அதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களை மிரட்டுவது, லஞ்சம் வாங்க வாங்குவது பத்திரமாக வாங்குவது போன்ற வழிகள் மூலமாக நிதியை பெற்றுள்ளது'
என்று கூறினார்.