/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/youn.jpg)
ஒரு இளைஞரை, நான்கு பேர் கொடூரமாகத்தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநில, சூடாபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராமேஸ்வரபா ஜெயசாய் யுவராஜ். இளைஞரான இவர், மல்கிபுரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். வகுப்பு கண்காணிப்பாளராக இருந்த யுவராஜ் மீது கோபத்தில் இருந்த அதே கல்லூரியில் படித்த மாணவர்கள் நான்கு பேர் அவரை பழிவாங்க துடித்துள்ளனர்.
அதன்படி, யுவராஜை கல்லூரிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி அவரை யாரும் இல்லாத ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு வைத்து யுவராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். கற்கள் வீசியும், கையால் அடித்தும் யுவராஜை இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை, தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தாக்குதல் நடத்திய நான்கு மாணவர்கள் கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)