/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/policen_5.jpg)
உத்தரப் பிரதேச மாநிலம், பரேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முஸம்மில் (28). இவர் மொபைல் டவர் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், காலை வீட்டை விட்டு வெளியேறிய முஸம்மில், மாலை வரை வீடு திரும்பவில்லை. இதில் அதிர்ச்சியடைந்த முஸம்மிலின் தந்தை, தனது மகனுக்கு தொலைப்பேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், முஸம்மில் போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், தனது மகனை காணவில்லை என பிசல்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதற்கிடையில், பர்காபூர் பகுதியில் உள்ள கால்வாய் அருகே ஒரு இளைஞரின் உடல் இருப்பதால் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாருக்கு அந்த உடல் முஸாம்மில் உடல் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, முஸாம்மில் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில், முஸம்மில் கழுத்தை அறுத்தும், அவரது ஆணுறுப்பை சிதைக்கப்பட்டும் கொல்லப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து, முஸம்மிலுக்கு சில நபர்களுடன் தகராறு இருந்ததாகவும், அவருடைய கொலைக்கு அந்த நபர்கள் தான் காரணம் என்றும் முஸம்மிலின் தந்தை போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன்படி, பிலிபிட்டில் உள்ள ரிச்சவுலா கிராமத்தைச் சேர்ந்த சந்தேக நபர்களான அர்ஹான் மற்றும் அவரது நண்பர் குட்டு ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், முஸம்மிலை கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
அர்ஹானின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன், முஸாம்மில் தகாத உறவு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அர்ஹானுக்கும், முஸாம்மிலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அவர்கள், முஸம்மிலை கொலை செய்து அவரது உடலைக் கட்டி காரில் ஏற்றிச் சென்று வீசியுள்ளனர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, அர்ஹான் மற்றும் குட்டு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)