Advertisment

புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்; அத்துமீறிய டிஎஸ்பி

incident happened to a woman who came to complain in DSP office at karnataka

Advertisment

கர்நாடகா மாநிலம், பாவகடா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், நிலப் பிரச்சனை தொடர்பாக மதுகிரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கும் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ராமசந்திரப்பாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

விசாரணை என்ற பெயரில், அந்த பெண்ணை தன்னுடைய அறைக்கு அழைத்து துணை காவல் கண்காணிப்பாளர் ராமசந்திரப்பா பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை ஜன்னல் வழியாக மறைந்து நின்ற அடையாளம் தெரியாத ஒருவர் தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, துணை காவல் கண்காணிப்பாளர் ராமசந்திரப்பா தலைமறைவானார். இந்த சம்பவம் குறித்து ராமசந்திரப்பாவை இடைநீக்கம் செய்யப்பட்டது மட்டுமின்றி, தலைமறைவாகி இருந்த அவரை போலீசார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண், எந்தவித புகாரும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

incident police DSP karnataka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe